Blogs

Mar 11, 2024

புனர்பூசம் நட்சத்திரம்

நட்சத்திர அணிவகுப்பில் ஏழாவது நட்சத்திரம் புனர்பூசம் ஸ்ரீ ராமபிரான் அவதரித்த அபூர்வ நட்சத்திரமாகும். ஆட்சி செய்யும் கிரகம் குருவாக இருந்தாலும், புதனுடைய ஆதிக்கம் முதல் மூன்று பாதங்களுக்கு வலுவாக இருக்கும். சிவப்பு வண்ணம்; தேவ கணம். மிதுன ராசிக்குள் மூன்று பாதமும், கடக ராசிக்குள் ஒரு பாதமும் இருக்கும் இது, 80 பாகை முதல் 9320 பாகை வரை வியாபித்துள்ளது. ஆன்மிக நாட்டமும் அறிவாற்றலும் இந்த நட்சத்திரத்தில் பிறந்த வர்களுக்கு அதிகமாக இருக்கும். ரமண மகரிஷி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான் இந்த நட்சத்திரத்தை ஆட்சி செய்யும் கடவுள் அதிதி- பூமாதேவி, செல்வத்தையும் மற்றும் எல்லா நலன்களையும் வழங்கும் ஆற்றல் படைத்தது இது.
புகழ் உடையவர்கள்; புண்ணியவான்; இளம் வயதில் சிறிது வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்று, பிற்காலங்களில் அரசு வழித் தொல்லைகளை அனுபவித்து, பலராலும் நிந்திக்கப்பட்டு, பின்னர் குடும்ப வாழ்வில் பொன், பொருள் சேர்த்து, அறுபதாம் வயதில் செல்வமும் புகழும் சுலபமாகப் பெறுவார்கள் என கவி உணர்த்துகிறது

Mar 10, 2024

திருவாதிரை நட்சத்திரம்

நட்சத்திர அணிவகுப்பில் ஆறாவது நட்சத்திரம் திருவாதிரை மிதுன ராசி மண்டலத்தில் 6640 பாகை முதல் 80.00 பாகை வரை விரிந்துள்ள நட்சத்திரம். ஒரு கடிகாரத்தைப்போல் வானவெளியில் ஜொலிக்கும் தன்மையுடையது. உலகைக் காத்தருளும் உமாமகேஸ்வரன் உதித்த நட்சத்திரம் ஈஸ்வரனின் கழுத்தை அலங்கரிக்கும் சர்ப்பமாகிய இந்த ஸ்ரீ ராகு பகவானே இந்த நட்சத்திரத்தின் அதிபதியாவார். இருப்பினும் புதனுடைய பங்கும் இருக்கப் பெறுகிறது. திருவாதிரை என்றால் ஈரம் எளி நிறைந்த தன்மை என்று பொருள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிர சிந்திக்கும் திறன் மிகுதியாக உள்ளவர்கள் மழைக்குப்பின் வசந்த காலம் ன்ற வருவதுபோல் இவர்கள் வாழ்வில் துன்பத்திற்குப் பின்தான் இன்பம் மிகையாகும். மனித கணம், பெண் இனத்தைச் சார்ந்த இந்த நட்சத்திரம், ஆண்- பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக வந்தால் -லி ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு. ஏக நட்சத்திரம் ஆகாது. எனினும், அது சிறப்பு நட்சத்திரமாவதால் ரஜ்ஜு தட்டாது (தடைப்படாது); பொருத்தம் உண்டு என திடமான முடிவுக்கு வரலாம்.
கோபம் இருக்கும் இடத்தில்தான் நல்ல குணம் இருக்கும் என நிரூபணம் செய்பவர்கள் இந்த நட்சத்திரக்காரர்கள். சிலர் ருசியோடு ல் சாப்பிட அதிக விருப்பம் காட்டுவார்கள். கலைஞானம் உடையவர்கள். 5ந் நட்சத்திர முதல் பாதத்தில் பிறந்திருந்தால் நல்ல குணவான். இதமாகப் ம் பேசி பிறரைத் தம் வலையில் வீழ்த்தும் புத்திசாலி. இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் படபடவெனப் பேசி கோபத்தை வரவழைத்தாலும், ஆபத்தில் கைகொடுப்பவர்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் வாதாடும் திறமை, சுலபத்தில் கடவுள் அனுக்கிரகம் கு பெற இயலாத நிலையில் காணப்படுபவர்கள். பெண்களிடம் சிலர் கூச்ச சுபாவத்தை வெளிப்படுத்துவார்கள். நான்காம் பாதத்தில் = பிறந்தால் துணிச்சலானவர்கள். நல்ல விவேகம் அமையப் பெறும். பந்து ஜன பகையைத் தவிர்க்க இயலாதவர்கள். மனதை இதமாக வைத்துக் கொள்வது நன்று. பிறர் கஷ்டப்படுவதைச் சகிக்க முடியாதவர்கள்

Mar 9, 2024

மிருகசீரிடம் நட்சத்திரம்

நட்சத்திர வரிசையில் ஐந்தாவது நட்சத்திரம் மிருகசீரிடம் ஆகும். மீன் ரிஷப ராசிக்குள் 5320 பாகை முதல் 6000 பாகை வரையும்; மிதுன நால் ராசி மண்டலத்தில் 6100 பாகை முதல் 66.40 பாகை வரையும் வியாபித் திருப்பது. மிருக என்றால் மான்; சீர்ஷம் (சிரசு) என்றால் தலை. மானின் தலைபோலவே இந்த நட்சத்திரம் தோன்றும் காரணத்தால் இதற்கு மிருகசீரிஷம் என்று பெயர் உருவானது. தேவ கணத்தை சார்ந்தது; அலி இனம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் அதிதேவதை சந்திரன். ணடி பெரும் மகிழ்ச்சிக்கும் வாழ்வில் ஒளியேற்றுவதற்கும் காரணமாகத் உத்த திகழ்பவர். புகழ் பெற்ற ஜோதிடரான டாக்டர் பி.வி. ராமன் இந்த ல்லை நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆன்மிக நாட்டமும் ஆராய்ச்சியில் ஈடுபாடும் மிக்கவர்கள் இந்த நட்சத்திரக்காரர்கள். ரஜ்ஜு பொருத்தத்தின் வரிசையில் சிறப்பு ரஜ்ஜுவாக அமையப் பெற்றது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் தலைமைப் பொறுப்பேற்று நடத்த தகுதி வாய்ந்தவர்கள். எவரையும் தன் வசம் ஈர்க்கும் அற்புத நட்சத்திரம். அழகான- அறிவான- கற்பனைத் திறனு டைய குழந்தைகள் இந்த நட்சத்திரத்தில் பிறப்பார்கள். புகழ் பெற்ற நடிகை புரூக் ஷீல்டு இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆனி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர் ஜார்ஜ் புஷ். மிருகசீரிட லக்னத் தில் பிறந்தவர்கள் விளையாட்டு வீராங்கனை வீனஸ் வில்லியம், பகவான் ரஜ்னீஷ் போன்றோர். எனவே இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பெருமைக்குரியவர்கள்.

Mar 8, 2024

ரோகிணி நட்சத்திரம்

நட்சத்திர வரிசையில் நான்காவது நட்சத்திரம் ரோகிணியாகும். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவதரித்த உன்னத நட்சத்திரம் என்ற பெருமையும் இதற்குண்டு, ரிஷப ராசி மண்டலத்தில் 40.00 பாகை முதல் 5320 பாகை வரை வியாபித்திருக்கும் வான மண்டலத்தில் ஐந்து நட்சத்திரங்கள் இணைந்து வண்டு வடிவத்தில் இது காட்சியளிக்கும். த்தியோக தேவ கணம்; பெண் இனம், விக்டோரியா மகாராணி ரோகிணி வதிக்குத் நட்சத்திரத்தில் பிறந்தவராம் மர்லின் மன்றோ சூரியன் ரோகிணியில் வண்டும் இருக்கப் பிறந்தவர். இன்னும் பலரைப் பட்டியலிடலாம். பொதுவாக ப்பதால் இவர்களுக்கு 30 வயது முதல் 50 வயது வரை யோக காலம். ராகு தசையில் இளமையில் திருமணம் செய்தால் சில மாறுதல்கள் வரும். மாறுதலின் வகை பிற ராசிநாதர்கள், கிரகநாதர்களைச் சார்ந்து தெரிய வரும்.
கடற்படை, கடல்துறை, கடல் வாணிபம், அரசியல், விவசாயம், மாட்டுப் பண்ணை, வீடு, நிலம் சார்ந்த ரியல் எஸ்டேட், எண்ணெய், பெட்ரோல் பங்க், பார், உணவகம், வாசனைத் திரவியம் உற்பத்தி, ஆட்டோமொபைல், பொதுநலத் தொடர்பு, பயிர்த் தோட்டம், பழ வகைகள் பயிரிடல், ஆடை ஆபரணத் தொழிற்சாலை, மங்கையருக் குரிய ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பது, ருசியான அதிக நெய் கலந்த இனிப்பு வகைகள் தயாரிப்பது, விற்பனை செய்வது போன்றவை ராசியானவை.

Mar 7, 2024

கார்த்திகை நட்சத்திரம்

நட்சத்திர வரிசையில் மூன்றாவது நட்சத்திரம் கார்த்திகை வான மண்டலத்தில் 26 முதல் 40 பாகை வரை வியாபித்திருக்கும் இது மேஷ, ரிஷப ராசிகளுக்குள் இருக்கப் பெறும் ராட்சஸ குணம் நிரம்பியது. ஆறு நட்சத்திரங்கள் கொண்டது. செம்மை நிற முடையது. அக்னி மண்டலமாகும். ஆறுமுகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் பிறக்கும்போதே சூரிய தசையுடன் பிறக்கிறார்கள் இந்த நட்சத்திரத்தில் முதல் பாதத்தில் பிறப்பவர்கள் மட்டும் தோஷம் உடையவர்கள் என சாஸ்திரம் உணர்த்துகிறது இரவு நேரத்தில் குழந்தை பிறந்தால் தாய்க்கும், பகல் நேரத்தில் பிறந்தால் தந்தைக்கும் பின்னடைவுகள் ஏற்படும். அதற்குரிய சாந்திப் பரிகாரங்களைச் செய்வது நன்று.
பில் கிளின்டன், ரொனால்ட்ரீகள் ஆகியோர் கார்த்திகையில் பிறந்தவர்கள் பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 25 முதல் 35 மற்றும் 50 முதல் 56 வரையிலான வயதுகளில் இடம் மாற்றம், தொழில் மாற்றங்கள் ஏற்படுமாம். சோதித்துப் பாருங்கள். ஆட்சி புரிபவர் சூரியன். மொத்தத்தில் சுறுசுறுப்பும் துடுக்கும் அவசரத் தன்மையும் நிறைந்தவர்கள்.

Mar 6, 2024

பரணி நட்சத்திரம்

நட்சத்திர வரிசையில் இரண்டாவது நட்சத்திரமாக முக்கோண வடிவத்துடன் உள்ள பரணி நட்சத்திரம் மனித கணத்தைச் சார்ந்தது. மேஷ ராசிக்குள் அமையப் பெற்றது. இது ராசியில் 13-20 பாகை முதல் 26-40 பாகை வரை வியாபித்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிறக்கும்போதே சுக்கிர தசையுடன் பிறப்பவர்கள். பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்பது அனுபவப் பழமொழி எல்லாரும் தரணியை ஆள முடியுமா? ஆனால் ஏதோ ஒரு துறையில் தனது திறமைதனை வெளிப்படுத்தி சாதனைகள் புரிய இந்த நட்சத் திரம் அரும்பாடுபடும். உதாரணமாக, தத்துவ மேதை காரல் மார்க்ஸ் கம்யூனிசத்தை உலகளாவப் பரவச் செய்தவர். இவர் 5-5-1818-ல் பிறந்து 1883 வரை வாழ்ந்தவர்; பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர். சூரியன் பரணியில் அமர்ந்திருக்கப் பிறந்தவர் சதாம் ஹுசேன். எவருக்கும் தலை வணங்காது தூக்கு மேடையைச் சந்தித்த பரணி நட்சத்திரக்காரர் இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனை ஆட்சியில் அமர்ந்திருந்தபோதே மாய வலையில் சிக்க வைத்து மதிமயக்கம் கொள்ள வைத்த மோனிகாவும் பரணியில் பிறந்தவர்தான்

Mar 5, 2024

அசுவினி நட்சத்திரம்

27 நட்சத்திரங்களில் முதல் இடம் வகிப்பது. அசுவம் என்றால் குதிரையைக் குறிப்பது இவர்கள் பிறக்கும்போதே ஞானவான் குருவின் தசையில் வாழ்வின் தொடக்கம் இருக்கப் பெறும் பிரின்ஸ் சார்லஸ், புகழ் பெற்ற பணக்காரர் ஒனாசிஸ், காமெடியன் ஜெரிரி லூயிஸ்- இவர்கள் அசுவினியில் பிறந்து அற்புதம் அடைந்தவர்கள். சூரியன் மேஷத்தில் இருக்கும்போது பிறந்தவர்தான் அடால்ப் ஹிட்லர், சார்லி சாப்ளின் போன்றோர். உலகப் புகழ் பெற்றோரை உதாரண புருஷர்களாக நாம் ஆராய்ந்து பார்த்தால் அந்த நட்சத்திரத்தில் பிறந்த நம்மால் அவர்களைப்போல் சாதனை படைக்கலாமா என எண்ணத் தோன்றும் முயற்சிகள் நல்ல வழிகாட்டுதல்களாக அமையும்.(இந்த நட்சத்திர குணநலன்களை பல ஜோதிடத் தகவல்கள் மூலமாக அறிந்துள்ளோம்.